Director SS Rajamouli Untold Story
தெலுங்கு திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமௌலி. 2001- வெளியான, ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய முதல் படத்தில் NTR ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
கடந்த 24 வருடத்தில், மொத்தம் 12 படங்கள் மட்டுமே இவர் இயக்கி இருந்தாலும்... இவர் இயக்கத்தில் வெளியான .ஒவ்வொரு படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதை... மற்றும் பிரமாண்டத்தை கூட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார் ராஜமௌலி.
RRR Movie Got Oscar
குறிப்பாக இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் தமிழிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதே போல் 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் கவனிக்கப்பட்ட இயக்குனராக மாறினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படம் உலக சினிமா ரசிகர்களையே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்கவைத்த படமாக மாறியது. பாலிவுட் திரைப்படங்களே தான் இந்திய சினிமாவின் முகமாக இருந்த நிலையை மாற்றி, தெலுங்கு சினிமாவை முன்னிலை படுத்திய பெருமை ராஜமௌலியை தான் சேரும்.
2022-ஆம் ஆண்டு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை ஹீரோவாக வைத்து, இவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆஸ்கர் கனவை நிஜமாகியது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் ராஜமௌலி கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் என பல விருதுகளை வென்றார்.
ஒரே வாரம் தான்! வெயிட்டான தொகையுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீந்தர்; எவ்வளவு தெரியுமா?
Mahesh Babu And Rajamouli Movie
குறிப்பாக இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் தமிழிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதே போல் 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் கவனிக்கப்பட்ட இயக்குனராக மாறினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படம் உலக சினிமா ரசிகர்களையே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்கவைத்த படமாக மாறியது. பாலிவுட் திரைப்படங்களே தான் இந்திய சினிமாவின் முகமாக இருந்த நிலையை மாற்றி, தெலுங்கு சினிமாவை முன்னிலை படுத்திய பெருமை ராஜமௌலியை தான் சேரும்.
2022-ஆம் ஆண்டு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை ஹீரோவாக வைத்து, இவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆஸ்கர் கனவை நிஜமாகியது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் ராஜமௌலி கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் என பல விருதுகளை வென்றார்.
Rajamouli Wife Rama Condition:
சாதாரண குடும்பங்களில், எப்படி கணவர் பேச்சை மனைவி கேட்பாரோ... அதே போல் ராஜமௌலி பேச்சை ரமாவும், மனைவி ரமா பேச்சை இருவரும் கேட்பார்கள். ஓய்வு நேரத்தில் ராஜமௌலி வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்ற அணைத்து வேலைகளுக்கும் மனைவிக்கு உதவி செய்வார் ராஜமௌலி.
அதே போல் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன், எந்த ஒரு கணவனும் செய்ய தயங்கும் செயலை காதலோடு தன் மனைவிக்காக செய்து வருகிறார் ராஜ மௌலி. அதாவது படப்பிடிப்பு நேரத்தில் மனைவி ரமா, ராஜமௌலியின் கால்களைப் பிடித்து விடுவாராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராஜமௌலி, ரமாவின் கால்களைப் பிடித்து விடவேண்டும் என்பது இவர்கள் இடையே உள்ள ஒரு ஒப்பந்தமாம்.
மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசனுக்கு பதிலாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!
SS Rajamouli Simplicity
இப்படியெல்லாம் செய்வது மூலம்.. எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், மனைவியிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை ராஜமௌலி நிரூபிக்கிறார். இயக்குனர் என்ற கர்வம் இல்லாமல் மனைவிக்காக இவர் செய்யும் விஷயங்கள் பாராட்டுக்குரியது. ரமா... ராஜமௌலியின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ராஜமௌலி இவ்வளவு பெரிய இயக்குனராக சாதித்துள்ளதில் ரமாவுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.