மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசன்? அப்போ விஜய் சேதுபதி நிலைமை!

Published : Oct 14, 2024, 01:34 PM IST

Bigg Boss Kamalhaasan : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகிய கமல்ஹாசன் விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

PREV
14
மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசன்? அப்போ விஜய் சேதுபதி நிலைமை!
kamal

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் சுமார் 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து வெற்றிநடை போட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். அவரின் தொகுத்து வழங்கும் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனால் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன். ஆனால் அவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை.

24
Kamalhaasan, Vijaysethupathi

கமல்ஹாசன் விலகியதால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கமலையே மிஞ்சும் அளவுக்கு அவர் தொகுத்து வழங்கி வருவதாக பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருவதால், அதன் வாயிலாக எது செய்தாலும் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிடும். இதனால் பட புரமோஷன்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி செய்யப்படுவதுண்டு.

இதையும் படியுங்கள்... ஒரே வாரம் தான்! வெயிட்டான தொகையுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீந்தர்; எவ்வளவு தெரியுமா?

34
Amaran Movie Sai Pallavi, Sivakarthikeyan

அந்த வகையில் இந்த சீசனில் கமல்ஹாசனே பட புரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனரான இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சில சீசன்களை இயக்கி உள்ளார்.

44
Amaran Movie Producer Kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிய கமல்ஹாசன் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சியில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ள தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவி தான் வாங்கி உள்ளதால், நிச்சயம் அப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் திரைப்படம் அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... என்னது நான் அடுத்த தளபதியா? அமரன் பட விழாவில் நச் பதில் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!

Read more Photos on
click me!

Recommended Stories