Published : Oct 14, 2024, 12:53 PM ISTUpdated : Oct 14, 2024, 12:59 PM IST
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து, ஒரே வாரத்தில் வெளியேறியுள்ள பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் எவ்வளவு தொகையுடன் வெளியேறி உள்ளார்? என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக பிரபல தயாரிப்பாளரும், youtube விமர்சகருமான
ரவீந்தர் சந்திரசேகர் பெயர் அடிபட்டு வந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவீந்தர் சந்திரசேகர். உள்ளே வந்த முதல் நாளே, கன்டென்ட் கொடுக்க தொடங்கிய ரவீந்தர்... "இந்த பிக் பாஸ் வீட்டுக்கு பொருத்தமான ஆள் நான் மட்டும் தான் என கூறி... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என இவர் சொன்ன பன்ச் டயலாக், சிரிக்க மட்டும் அல்ல அனைவரையும் சிந்திக்கவும் வைத்தது.
25
Bigg Boss First Contestant Ravinder Chandrasekar:
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, இதனை குறிப்பிட்டு பேசியது ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இவருடைய எடையை கருத்தில் கொண்டு இவருக்காகவே தனி சேர் ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் பிக் பாஸ். அதே போல் பிக் பாஸ் வீட்டில் ஃபிஸிகல் விளையாட்டில் தன்னால் மற்ற போட்டியாளர்களுடன் ஈடு கொடுத்து விளையாட முடியாவிட்டாலும், தன்னுடைய வாய் ஜாலத்தினாலேயே தனக்கு தோன்றிய ஒவ்வொரு கருத்தையும் அடுக்கினார். இது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.
பிக்பாஸின் 24 மணி நேர எலிமினேஷன் டாஸ்க் அறிவித்தபோது, ஒரு சிலர் ரவீந்தர் சந்திரசேகர் பெயரையும் குறிப்பிட்டு பேசிய நிலையில்... தன்னுடைய உடல் எடையை குறிப்பிட்டு நான் வெளியேற வேண்டும் என யாரும் கூற வேண்டாம் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார். பின்னர் பலரும் சாச்சனாவை குறிவைத்து பேசி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது எதிர்பாராத ஒன்று என்றாலும்.. பின்னர் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதிரடியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சாச்சனா என்ட்ரி கொடுத்தார்.
45
Ravinder Chandrasekar Evicted
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீந்த சந்திரசேகர் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் என கூறினாலும், ஒரு சிலர் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதினர். காரணம் தன்னுடைய கண்டெண்ட்டை நேர்த்தியாக கொடுத்து வந்தார் ரவீதர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேஷன்காக விளையாடிய விளையாட்டில்... சில போட்டியாளர்கள் அவர் சொல்லியதை சரியாக கவனிக்காமல் அவர் மீது பழி போட்டதும், விஜய் சேதுபதி இதை குறிப்பிட்டு பேசியதும், ரவீந்தரை கலங்கச் செய்தது. அதேபோல் ஆர் ஜே ஆனந்தி ரவீந்தர் சந்திரசேகர் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருப்பதாக கூறிய போது அது பர்சனலாக ரவீந்தர் சந்திரசேகரின் உணர்வுகளை சீண்டிப் பார்த்தது.இதனால் தன்னுடைய மனைவி மகாலட்சுமி சொன்னது நிஜம் ஆகிவிட்டது என வீட்டிற்குள் கண்ணீர் வடித்தார்.
மகாலட்சுமி தன்னுடைய கணவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், அவருடைய எடை மற்றும் அவர் ஒரு சில விஷயங்களில் படும் சிரமங்களை பார்த்து.. ரசிகர்கள் குறைந்த வாக்குகளுடன் இவரை வெளியேற்றி உள்ளதாக தெரிகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், ஒரு நாளைக்கு மட்டும் சுமார் ஐம்பதாயிரம் சம்பளமாக பெற்று வந்த நிலையில், 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இது ஒரு நாளைக்கு பத்தாயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்ற பிரபலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும். அவர்கள் ஒரு மாதம் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் கூட 3 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.