லீக்கான வீடியோ; ஃபுல் வெர்ஷன் கேட்ட ரசிகருக்கு ஓவியா கொடுத்த ஷாக்கிங் பதில்

First Published | Oct 14, 2024, 12:16 PM IST

Oviya Private Video : நடிகை ஓவியாவின் படுக்கையறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவிய நிலையில், அதுபற்றி ஓவியாவே பதிவிட்டுள்ளார்.

Kollywood Actress Oviya

சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. அவர் தமிழில் நடித்த முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து சரத்குமார் ஜோடியாக சண்ட மாருதம், சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, விமலுடன் களவாணி 2 போன்ற படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் ஓவியாவுக்கு கிடைக்காததால் சட்டென முடிவெடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் நடிகை ஓவியா.

Oviya Video leaked

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்கள் இடையே பேமஸ் ஆனதற்கு மிகமுக்கிய காரணம் ஓவியா தான். அவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதுமட்டுமின்றி தன்னை எதிர்ப்பவர்களுடன் துணிந்து சண்டையிட்ட ஓவியாவின் குணம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அவருக்கு சோசியல் மீடியாவில் ஆர்மியெல்லாம் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் ஓவியாவை தலை தூக்கிவைத்து கொண்டாடினர். இதனால் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் ஓவியா.

இதையும் படியுங்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!

Tap to resize

Actress Oviya Private Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் எழுந்தன. அதன்படி அந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வை உருகி உருகி காதலித்தார் ஓவியா. அதுமட்டுமின்றி ஓவர் மன அழுத்தம் காரணமாக அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார் ஓவியா. அதையடுத்து காப்பற்றப்பட்ட அவர் அன்றைய தினமே பிக்பாஸ் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆகும் தகுதியுடன் இருந்த ஓவியா பாதியில் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

பிக்பாஸுக்கு பின்னர் ஓவியாவின் கெரியர் ஓஹோனு இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதை அவர் சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால் அவரது சினிமா கெரியர் அப்படியே உல்டா ஆனது. 

Oviya Reply

இதனால் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தத்தளித்து வருகிறார் ஓவியா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஓவியாவின் படுக்கையறை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி இருந்தது.

அது போலி வீடியோவாக இருக்கும் என சிலர் கூறி வந்த நிலையில், அந்த வீடியோ விவகாரம் குறித்து நடிகை ஓவியாவே ஓப்பனாக பதிலளித்துள்ளார். அதன்படி நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில் முழு நீள வீடியோ எடுத்திருக்கலாம் என பதிவிட, அதற்கு அடுத்த முறை பண்றேன் புரோ என கூலாக பதிலளித்து இருக்கிறார். ஓவியா அளித்துள்ள இந்த பதில் தான் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அதிசயம் நடந்துருச்சு.. மீண்டும் ஒன்று சேர்ந்த பிக் பாஸ் ஜூலி, ஓவியா - என்னங்க சொல்றீங்க !!

Latest Videos

click me!