திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்புல்; பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த வேட்டையன்!!

First Published | Oct 14, 2024, 11:33 AM IST

Vettaiyan Box Office : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் வேட்டையன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் சாதனை பற்றி பார்க்கலாம்.

Vettaiyan

ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

Rajinikanth, Manju Warrier

ரஜினிகாந்த் இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்தார். அவருடன் படம் முழுக்க பயணிக்கும் ஒரு ஸ்மார்ட் திருடனாக பகத் பாசில் நகைச்சுவையான கதாபாத்திரத்திலும், மறுபுறம் சீரியஸான டீச்சர் ரோலில் துஷாரா விஜயனும், துறுதுறு ஐபிஎஸ் அதிகாரியாக ரித்திகா சிங்கும் நடித்திருக்கும் இப்படம் போலி என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நீட் கோச்சிங் என்கிற பேரில் நடக்கும் மோசடியையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது வேட்டையன் படம்.

இதையும் படியுங்கள்... வேட்டையன் கிளைமேக்ஸ் இப்படி இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்!

Tap to resize

Vettaiyan Collecttion

பொதுவாக மெசேஜ் உள்ள படங்கள் கல்லாகட்டாது என்கிற எழுதப்படாத விதி திரையுலகில் உள்ளது. அதையெல்லாம் வேட்டையன் தகர்த்தெறிந்து உள்ளது. ரஜினிகாந்த் எனும் கமர்ஷியல் ஹீரோவை வைத்து எடுத்தால் எதுவேண்டுமானாலும் சாத்தியம் என்பதை வேட்டையன் திரைப்படம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது. இப்படத்திற்கு திட்டமிட்டு சில நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டாலும் பேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடித்துப்போனதால் வேட்டையன் வசூலிலும் வேட்டையாடி வருகிறது.

Vettaiyan Box Office

அதன்படி வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆன நான்கு நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது. இதுவரை இப்படம் உலகளவில் ரூ.212.35 கோடி வசூலித்து உள்ளது. இதில் முதல் நாளில் 77.90 கோடி, இரண்டாம் நாளில் 45.26 கோடி, மூன்றாம் நாள் 47.87 கோடி, நான்காம் நாள் ரூ.41.32 கோடியும் வசூலித்து இருக்கிறது. விரைவில் வேட்டையன் படம் ரூ.250 கோடி என்கிற இமலய வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினியை மட்டும் கொண்டாடவே பகத் பாசில் கேரக்டரை குளோஸ் பண்ணிய இயக்குநர் டி ஜே ஞானவேல்!

Latest Videos

click me!