பிக்பாஸில் அடுத்த எலிமினேஷனுக்கு ஆள் ரெடி! இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்; யார்?

First Published | Oct 14, 2024, 9:41 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆகி உள்ள நிலையில், இரண்டாவது வாரம் நாமினேஷனில் சிக்கியது யார் என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற முறையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்கள் தனி அணியாகவும் பெண்கள் தனி அணியாகவும் பிரிந்து விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒரு வாரம் ஆகியும் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

Gana Jeffry

இதனை விஜய் சேதுபதியும் விமர்சித்து இருந்தார். போட்டியாளர்கள் அனைவரும் டூர் வந்தது போல் இருப்பதாக அவர் சாடி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த எவிக்‌ஷன் நடைபெறும். அதன்படி கடந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளின் படி குறைவான வாக்குகளை பெற்ற தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்... சகுனி வேலை பார்த்த சாச்சனாவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி; அந்த வார்த்தை சொல்லி திட்டிய சுனிதா

Tap to resize

Ranjith

ரவீந்தரை தொடர்ந்து இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது. இதில் நாமினேட் ஆனவர்களின் விவரம் புரமோவில் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகப்படியான போட்டியாளர்கள் ஜெஃப்ரியை தான் நாமினேட் செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் இடம் கொடுத்தா டூமச்சா யூஸ் பண்ணிக்கிறான் என சொல்லி செளந்தர்யா, தர்ஷா குப்தா, சாச்சனா நமிதாஸ் ஆகியோர் கானா ஜெஃப்ரியை நாமினேட் செய்து இருக்கிறார்கள். 

Sachana

ஜெஃப்ரிக்கு அடுத்தபடியாக ரஞ்சித்தை சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர். அவர் எதையும் ஓப்பனாக பேசமாட்டிக்கிறார் என்று சொல்லி அவரை நாமினேட் செய்துள்ளனர். பின்னர் ஆண் போட்டியாளர்களான ரஞ்சித், அர்னவ், தீபக் ஆகியோர் செளந்தர்யாவை நாமினேட் செய்துள்ளனர். இறுதியாக வயசுக்கு தாண்டி சில விஷயங்களை பேசுவதாக கூறி சாச்சனாவை விஜே விஷால் மற்றும் சத்யா ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... ஃபர்ஸ்டுல போயிட்டு ஃபர்ஸ்டுலயே வந்த போட்டியாளர் – எல்லோரையும் வச்சு செஞ்ச ரவீந்தர், VJSயையும் விட்டு வைக்கல!

Latest Videos

click me!