சகுனி வேலை பார்த்த சாச்சனாவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி; அந்த வார்த்தை சொல்லி திட்டிய சுனிதா

First Published | Oct 14, 2024, 7:52 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள சாச்சனா, டபுள் கேம் ஆடியதை மேடையிலேயே ஓப்பனாக போட்டுடைத்தார் விஜய் சேதுபதி.

Sachana, Sunitha

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி ஆரவாரமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அதைப்பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கிவிட்டனர். அதற்கு முக்கிய காரணம், அந்நிகழ்ச்சியில் 24 மணிநேரத்தில் நடந்த முதல் எவிக்‌ஷன் தான். அதன்படி முதல் நாள் முடிவில் சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் படி சாச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

Bigg Boss Vijay sethupathi

பிக்பாஸ் வரலாற்றில் முதல் நாளிலேயே நடந்த எவிக்‌ஷன் இதுதான். கனவுகளோடு வந்து கண்ணீருடன் வெளியேறிய சாச்சனா, வீட்டுக்கு அனுப்பப்படாமல் பிக்பாஸ் சீக்ரெட் ரூமிலேயே வைக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டார். வீட்டுக்குள் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆன சாச்சனா, வந்த உடனே தான் பார்த்த வரையில் யார் யாரெல்லாம் சுமாராக ஆடி வருகிறார்கள் என சொன்னார்.

இதையும் படியுங்கள்...வெளியே வந்த ரவீந்தர் சந்திரசேகரின் முதல் ரெவியூ – எல்லோரையும் வச்சு செஞ்ச ரவீந்தர், VJSயையும் விட்டு வைக்கல!

Tap to resize

Sachana Namidass

அதில் அவர் அனைவர் முன்னிலையிலும் ஆண் போட்டியாளர்களில் இவங்க தான் வீக் என சத்யா, விஜே விஷால், ரஞ்சித் ஆகியோரது பெயரை சொன்னார். உடனே அங்கிருந்தவர்கள் பெண்களில் யார் வீக் என கேட்டதும், அதை நான் அவர்களிடம் தனியாக சொல்லிக் கொள்கிறேன் என சொல்லி ரூமுக்குள் அழைத்து சென்றுவிட்டார். பின்னர் உள்ளே சென்று வீக் போட்டியாளர்கள் பற்றி பேசாமல், பெண்களிடம் யூனிட்டி இல்லை என்று சில அட்வைஸ்களை வாரி வழங்கினார்.

sunitha slams sachana

இப்படி பெண் போட்டியாளர்களிடம் வாழைப்பழம் போல் பேசிவிட்டு, வெளியே வந்து ரவீந்தர் சந்திரசேகரிடம் பெண்களில் யாரெல்லாம் வீக் என சொல்லி இருக்கிறார். அதன்படி செளந்தர்யா, சுனிதா, அன்ஷிதா ஆகியோரது பெயரை ரவீந்தரிடம் சொல்லி இருக்கிறார் சாச்சனா. இந்த விஷயத்தை நேற்று நடந்த வீக் எண்ட் எபிசோடில் ஓப்பன் பண்ணினார் விஜய் சேதுபதி. சாச்சனா யார் யார் பெயரை சொன்னார் என விஜய் சேதுபதி ரவீந்தரிடம் கேட்க, அவரும் அந்த 3 பெண் போட்டியாளர்களின் பெயரை போட்டுடைத்தார்.

Sunitha fight with Sachana

இதன்மூலம் சாச்சனாவின் சகுனி வேலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் விஜய் சேதுபதி. அப்போது அவர் ஆடிய டபுள் கேமை பார்த்து பெண் போட்டியாளர்கள் முகம் சுளித்தனர். குறிப்பாக சுனிதா கடும் கோபம் அடைந்து விஜய் சேதுபதி முன் பேசுகையில், உள்ள வந்து யுனிட்டி மண்ணாங்கட்டினு பேசிட்டு இங்க இப்படி சொல்லி இருக்கிறார். இது ரொம்ப மோசம் என திட்டினார். சுனிதா மண்ணாங்கட்டி என திட்டியதும் அனைவரும் ஷாக் ஆகிப்போகினர். பின்னர் பிரேக்கில் சுனிதா கண்கலங்கியபோது அவரை சக பெண் போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர். இதனால் இந்த வாரம் சுனிதா சாச்சனாவை நாமினேட் செய்வார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளு மட்டும் இல்ல... வசதியிலும் வெயிட் பார்ட்டியாக இருக்கும் ரவீந்தர் யார் தெரியுமா?

Latest Videos

click me!