
Ravinder Chandrasekar Eliminated from Bigg Boss Tamil Season 8 : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு முதல் போட்டியாளராக வீட்டுக்குள் சென்றவர் தயாரிப்பாளரும், யூடியூப் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர். கடந்த வாரம் 6ஆம் தேதி மிக்ப்பிரமாண்டமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போது இப்போது தான் தகுதியான ஒரு போட்டியாளர் வந்திருக்கிறேன். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றார். ரவீந்தர் சந்திரசேகர் உடன் சேர்த்து ஆனந்தி, அன்ஷிதா, அர்னவ், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, ஜாக்குலின், முத்துக்குமார், பவித்ரா உள்பட மொத்தமாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர். ஆனால் 24 மணிநேரத்திற்குள்ளாக இந்த வீட்டிலிருந்து சாச்சனா நேமிதாஸ் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரவீந்தர் கூடுதல் எடை காரணமாக போட்டியில் பங்கேற்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரால் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பிராங் என்ற பெயரில் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளாவிற்கு சென்றனர். இது மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அதிகளவில் உண்மை தன்மையில்லாதவராக இருக்கிறார் என்பதற்காக ஃபேக் என்று சக போட்டியாளர்களால் முத்திரை குத்தப்பட்டார்.
இதற்கிடையில் முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்ட சாச்சனா திரும்ப வீட்டிற்குள் வந்தார். இது மற்றவர்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே அவருக்கு தெரிந்துவிட்டது. இந்த வாரம் வெளியேறப் போவது நான் தான் என்று அவரே கூறியிருக்கிறார். எனினும் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், முத்துக்குமார், சவுந்தர்யா, முத்துக்குமரன், ரஞ்சித், அருண் மற்றும் ரவீந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் ஒவ்வொருவராக காப்பாற்றப்பட கடைசியில் ரவீந்திர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். வெளியில் வந்த ரவீந்தர் முதலில் விஜய் சேதுபதி குறித்து ரெவியூ கூறினார். அதன் பிறகு சகட்டு மேனிக்கு சக போட்டியாளர்கள் பற்றி விமர்சனத்தை அடுக்கினார். இதில் முதலில் அவர் சொன்னது அர்னவ் தான் ஃபேக் என்றார்.
2ஆவது ரஞ்சித், செல்லம், தங்கம் இதெல்லாம் ஒரு கேம் பிளான் தான் என்றார். அடுத்ததாக தீபக் பற்றி பேசிய ரவீந்தர் எப்போதும் எதிரியை முன்னாடி தான் அடிக்கணும், முன்னாடி பேசணும், பின்னாடி பேசக் கூடாது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்தார். ஆண்களிடம் ஜால்ட்ரா இருக்கு. மனசாட்சி தான் பெரிய கேமரா. அதற்காக விளையாடுங்கள் என்றார்.
அதன் பிறகு அருணிடம் வந்த ரவீந்தர் ஒவ்வொருவரிடமும் முன்னும் பின்னும் பேசுவதாக கூறினார். இன்னோசண்ட் மாதிரி நடிக்கிற, தெளிவாக விளையாட என்றார். சத்யாவிடம் இங்கு மைண்ட் தான் முக்கியம் என்றார். விஷாலிடம் வந்த ரவீந்தர், சமையல் நல்லா இல்ல, நீ உனக்காக யோசிக்க வேண்டும். ஒரே ஒரு எண்டர்டையினர் நீ மட்டும் தான் என்றார்.
ஜெஃப்ரியிடம் வாய வார்த்தையை கவனாக பயன்படுத்து என்றார். பவித்ரா, பாய்ஸ் அணியில் இருக்கும் போது நீ உண்மையாகவே இல்லை என்றார். முத்துக்குமரன் உன்னிடம் தான் அறிவும், ஆற்றலும் இருக்கிறது. நான் உன்னை நம்புகிறேன். வியூகம் அமைத்துக் கொள் என்றார். சவுந்தர்யாவிடம் பெஞ்ச தேய்க்கிறத நிறுத்து. தர்ஷா நீ விளையாடுறது போலியான விளையாட்டு.
சுனிதாவிடம் வந்த ரவீந்தர் ஹானஸ்ட் ரியல் நீ. தமிழ்நாடு உன்னை நிச்சயமாக கொண்டாடும். அன்ஷிதா கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்து. தர்ஷிகா, நீ செம்ம கேடி என்றார். டுவிஸ்ட் கொடுப்பது கில்லாடி. சாச்சனா தேவைப்படும் போது பேசு. ஜாக்குலின் கேம் புரிஞ்சு விளையாடு என்றார்.
ஆனந்தி நல்ல மனிதநேயம் கொண்ட பெண். பயப்படாதே. சனிக்கிழமையில் ஸ்கோர் பண்ணுவது பெரிய விஷயமே இல்ல, 5 நாளும் ஸ்கோர் பன்னனும் என்றார். இப்படி ஒவ்வொருத்தர் பற்றியும் விமர்சனம் செய்த கையோடு வீட்டிற்கு நடையை கட்டினார். எஞ்சிய 17 போட்டியாளர்களில் அடுத்த வாரம் வெளியேறப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.