சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு சிம்பிளாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

First Published | Oct 14, 2024, 8:52 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் வெற்றி வசந்துக்கும் நடிகை வைஷ்ணவி சுந்தருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Vetri vasanth Engagement Photos

விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. டிஆர்பி ரேஸில் சன் டிவிக்கு டாப் 5ல் டஃப் கொடுக்கும் ஒரே ஒரு விஜய் டிவி சீரியலும் இதுதான். இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல் ஹிட்டான கையோடு தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டார் நடிகர் வெற்றி வசந்த். 

Vetri vasanth Engagement Photos

அதன்படி நடிகர் வெற்றி வசந்த் நடிகை வைஷ்ணவி சுந்தரை காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. நடிகை வைஷ்ணவி சுந்தர் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாகவும் மாறி இருக்கிறது. இந்த காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... சீரியலில் அண்ணன்; நிஜத்தில் காதலி! விஜய் டிவி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்த வெற்றி வசந்த்!

Tap to resize

Vetri vasanth Engagement Photos

வெற்றி வசந்த் - வைஷ்ணவி சுந்தர் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் அன்பை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

Vetri vasanth Engagement Photos

வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணமும் விரைவில் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தி முடித்தாலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் வெற்றி வசந்த்.

Vetri vasanth Engagement Photos

சீரியல் நடிகைகளையே நடிகர்கள் திருமணம் செய்யும் டிரெண்ட் சின்னத்திரையில் தொடர்ந்து தான் வருகிறது. ஏற்கனவே மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, ஆலியா மானசா - சஞ்சீவ், சேத்தன் - தேவதர்ஷினி, சித்து - ஸ்ரேயா வரிசையில் தற்போது வெற்றி வசந்த் - வைஷ்ணவி சுந்தர் ஜோடி இணைந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... காதலில் விழுந்து கணவன், மனைவியாக மாறிய தமிழ் சீரியல் ஜோடிகள் இத்தனை பேரா?

Latest Videos

click me!