மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசனுக்கு பதிலாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

First Published | Oct 14, 2024, 11:38 AM IST

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து, TTF வாசன் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது பிக்பாஸ் பிரபலம் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார்.
 

Manjal Veeran

பைக் ரைடிங், மற்றும் பைக்கில் வீலிங் சாகசங்கள் செய்து அதனை தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் போடும் வீடியோக்கள் பல விமர்சனங்களுக்கு ஆளானாலும், இதற்க்கு, இளசுகள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. மேலும் ரவீனா தாஹா, ஜிபி முத்து, உள்ளிட்ட பிரபலங்களை வண்டியின் பின்னால் ஏற்றிக்கொண்டு பயம் காட்டும் விதத்தில் வேகமாக வண்டி ஓட்டி இவர் வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
 

Manjal Veeran Movie New Hero

சாலை விதிகளை மதிக்காமல் TTF  வாசன் அதிவேகமாக பைக் ரைடிங் செய்வதாக புகார் அளிக்கப்பட்டதன் பெயரில், சிலமுறை கைது செய்யப்பட்டுள்ள இவர், சமீபத்தில் கூட... நடு ரோட்டில் பைக்கில் சாகசம் செய்த போது தூக்கி வீசப்படத்தில், அவருக்கு முகம், கை, கால், போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து TTF வாசன் மீது புகார் கொடுக்கப்பட்டு, இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் TTF வாசன், மாடு குறுக்கே வந்தது தான் இந்த விபத்துக்கு காரணம் என கூறினார்.  

அப்பாவாக போகும் சன் டிவி சீரியல் ஹீரோ! மனைவியின் 5 மாத பேபி ஷவர் போட்டோசை பகிர்ந்த கார்த்தி!
 

Tap to resize

Cool Suresh Replaced TTF Vasan Role

யூடியூப் பிரபலம் என்கிற அடையாளத்துடன்... தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக ஆயத்தமான TTF வாசன், இயக்குனர் செல்வம் என்பவர் இயக்கும் 'மஞ்சள் வீரன்' என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே  கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான "திரு.வி.க பூங்கா" என்கின்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். மஞ்சள் வீரன் திரைப்படம் துவங்கப்பட்டு படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வந்த நிலையில், அடுத்தடுத்த சில பிரச்சனைகளால் இந்த படத்திற்கு TTF வாசன் சரியாக ஒத்துழைக்கு கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.
 

Director Selvam Announced Officially

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், இயக்குனர் செல்வம் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து TTF  வாசன் நீக்கப்படுவதாக செய்தியாளர்களிடம் கூறிய நிலையில் விரைவில் புதிய நாயகன் யார் என்பது பற்றி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, TTF வாசன் நடித்து வந்த ஹீரோ வேடத்தில் கமிட் ஆகி உள்ளார், பிக்பாஸ் பிரபலமும்... காமெடி நடிகருமான கூல் சுரேஷ். இவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். 

இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?
 

Manjal Veeran Pooja Photo Goes Viral

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில்... இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை காமெடி, வில்லன், என பல்வேறு ரோல்களில் நடித்து வந்த கூல் சுரேஷ் தற்போது ஹீரோவாக மாறி உள்ளதற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos

click me!