இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசையில் சூர்யா... சில்லுனு ஒரு காதல், ஆயுத எழுத்து, 24, போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், சூர்யா என பக்காவான இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்க உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு இப்படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடிய விரைவில் இந்த படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த கணவனும் செய்ய தயங்கும் செயல்; மனைவிக்காக தினமும் இரவில் இதை செய்வாரா ராஜமௌலி?