
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யா, கங்குவா, பிரான்சிஸ் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னர் பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், மாற்றான், ஏழாம் அறிவு போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்த சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கங்குவா படத்திற்காக இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். இப்படத்திற்காக சுமார் இரண்டரை ஆண்டுகள் கடினமாக உழைத்திருந்தார் சூர்யா. இந்த காலகட்டத்தில் அவர் ஹீரோவாக நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை.
சூர்யா ஹீரோவாக நடித்து கடைசியாக தியேட்டரில் ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்ததால், கங்குவா படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருந்தார் சூர்யா. அதுவும் இப்படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கி இருந்ததால், படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதம் முன்னரே புரமோஷன் பணிகளை தொடங்கிய சூர்யா, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரமோஷன் செய்தார். படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றும் பில்டப் கொடுத்திருந்தார்.
இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் நேற்று (நவம்பர் 14) உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி கங்குவா படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அப்படம் பேரிடியாக அமைந்தது. படம் முழுக்க சூர்யா கத்திக் கொண்டே இருப்பதாகவும் இதனால் தலைவலி தான் வருகிறது எனவும் படம் பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் காமெடி என்கிற பெயரில் யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் செய்யும் கிரிஞ்சான விஷயங்கள் பொறுமையை சோதிக்க வைப்பதாகவும் கதறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரை தான்; கங்குவா பட பிரபலத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை!
முதல் ஷோ முடிந்ததுமே கங்குவா திரைப்படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். படம் படு நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் சூர்யாவின் கெரியரில் இது மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கங்குவா திரைப்படம் சுமார் ரூம்350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் பாதி வசூல் கூட வருமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.36 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் சூர்யாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை கங்குவா படைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.14.19 கோடி வசூலித்துள்ளதாம். இதுதவிர ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.5.48 கோடியும், இந்தியில் இப்படம் ரூ.3.85 கோடியும் வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் கங்குவா திரைப்படம் 9 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறதாம். படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கார்த்தி கேமியோ; ரோலெக்ஸ் என கங்குவா படத்தில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் - ஒரு பார்வை