இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்

First Published | Dec 9, 2022, 8:15 AM IST

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்ட நிலையில், அப்படத்திற்காக அவரின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது வணங்கான் படம் தான். இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாலா. சூர்யாவைப்போல் இப்படத்தை தயாரித்து வந்த சூர்யாவின் 2டி நிறுவனமும் இப்படத்தில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டது.

இது ஒருபுறம் இருந்தாலும், வணங்கான் படத்தை கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளாராம் பாலா. சூர்யா விலகினாலும், எஞ்சியுள்ள யாரும் இப்படத்திலிருந்து விலகவில்லை என கூறப்படுகிறது. ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டியும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும் தொடர்கிறார்கள் என்றும், சூர்யாவுக்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பதம் பார்க்கணும்னு சொல்றது காமெடியா...! ‘லவ் டுடே’ இயக்குனரை வெளுத்துவாங்கிய ‘கோமாளி’ பட நடிகை

Tap to resize

வணங்கான் படத்தில் சூர்யா நடித்த காட்சிகளை கிட்டத்தட்ட ஒருமாதம் படமாக்கினார் பாலா. கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஷூட்டிங் நடந்த போதெல்லாம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் எந்தவித தாமதமும் இன்றி சம்பளத்தை வழங்கி வந்ததாம் சூர்யாவின் 2டி நிறுவனம்.

இந்நிலையில், வணங்கான் படத்துக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ.10 கோடியை அந்நிறுவனம் செல்வு செய்ததாம். தற்போது படத்தில் இருந்து சூர்யாவே விலகி விட்டதால் அந்த 10 கோடி ரூபாயும் வேஸ்டாக போனதாக கூறப்படுகிறது. பாலாவை நம்பி போட்ட பணம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.

இதையும் படியுங்கள்... ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்த வரும் 'விழித்தெழு '..!

Latest Videos

click me!