நடிகர் சூர்யாவின் மகன் தேவ், மகள் தியா மற்றும் நடிகர் கார்த்தியின் மகள் உமையாள், மகன் கந்தன் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கருப்பு என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. அதேபோல் கார்த்தி நடிப்பில் தற்போது வா வாத்தியார் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
24
சூர்யா மற்றும் கார்த்தி ஃபேமிலி
சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது மும்பையில் படித்து வருகிறார்கள். அதேபோல் நடிகர் கார்த்தி, ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உமையாள் என்கிற மகளும், கந்தன் என்கிற மகனும் இருக்கிறார்கள். சூர்யாவின் மகன், மகளை அவ்வப்போது பொதுவெளியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் கார்த்தியின் பிள்ளைகள் பெரியளவில் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டியது இல்லை.
34
சூர்யா மகன் மற்றும் மகள்
இந்த நிலையில், குடும்ப விழா ஒன்றில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தங்கள் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதில் சூர்யாவின் மகன் தேவ், தன்னுடைய தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்திருக்கிறார். அதேபோல் சூர்யாவின் மகள் தியா, தன்னுடைய அம்மா ஜோதிகாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறார். இருவரையும் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், என்ன அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மறுபுறம் நடிகர் கார்த்தியின் மகள் உமையாளும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய தாத்தா சிவக்குமார் அருகே நின்று போஸ் கொடுத்துள்ளார். அதேபோல் கார்த்தியின் மகன் கந்தன் சூர்யா மகள் தியாவுடன் நின்று செம கியூட்டாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமாரும் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோதிகா மற்றும் கார்த்தியின் மனைவி ரஞ்சனி ஆகியோருடன் இணைந்து போட்டோ எடுத்திருக்கிறார்.