நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜய் ஹீரோவாக நடிக்கும் அடுத்த திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் ஓடிடி பார்ட்னராக இணைந்துள்ளது. ஓடிடி உரிமம் 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
24
ஜன நாயகன் டிரெய்லர் ரிலீஸ் எப்போது?
அதன்படி ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி டிசம்பர் 31 அன்று 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜன நாயகன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா என ஒரு பிரமாண்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
34
ஜன நாயகன் அப்டேட்
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணன், 'ஜன நாயகன்' படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சண்டைப்பயிற்சியாளராக அனில் அரசு, கலை இயக்குநராக வி. செல்வகுமார், நடனம் அமைப்பாளராக சேகர், சுதன், பாடல் வரிகள் அறிவு என பல திறமை வாய்ந்த கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர். ஜன நாயகன் திரைப்படத்தை பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வர உள்ளனர்.
ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ந் தேதி நடைபெற உள்ளது. மலேசியாவில் இந்த ஆடியோ லாஞ்சை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த ஆடியோ லாஞ்சை ஒரு கான்சர்ட் ஆக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த கான்சர்டில் விஜய்யின் கெரியரில் இடம்பெற்ற 35 ஹிட் பாடல்களை தேர்வு செய்து, அந்த பாடல்களை அதன் ஒரிஜினல் பாடகர்களே பாட உள்ளார்களாம். மொத்தம் 85 ஆயிரம் பேர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா.