எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை கடத்தி வைத்திருக்கும் ராமசாமி மெய்யப்பன், ஜனனி தன்னை நெருங்குவதை கண்டுபிடித்துவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ராமசாமி மெய்யப்பனை வைத்து சக்தியை கடத்தி வைத்திருக்கும் ஆதி குணசேகரன், தன் சம்பந்தப்பட்ட வீடியோவை கொண்டு வந்து கொடுத்தால், சக்தியை விடுவிப்பதாக கூறி இருக்கிறார். சக்தியை தென்காசியில் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்த ஜனனி, அவரை மீட்க அங்கு சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஜனனி, சக்தி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. மறுபுறம் வீட்டில் அறிவுக்கரசி, தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
சக்திக்காக தயாரான சவப்பெட்டி
சக்தியை சவப்பெட்டியில் வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராமசாமி மெய்யப்பன். இதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சவப்பெட்டி ஒன்றை தயார் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த பெட்டியில் உள்ளே சக்தியை வைத்து அடைத்து, உள்ளே செல்லும் ஆக்ஸிஜன் அளவை மெல்ல மெல்ல குறைத்து வந்து, இறுதியாக, அந்த ஆக்ஸிஜன் செல்லும் பைப்பை மூடிவிட்டால் அவர் செத்துவிடும்படி திட்டம் போட்டிருக்கிறார்கள். இந்த ஐடியா ராமசாமி மெய்யப்பனுக்கு பிடித்துப் போக, டைம் வரும்போது சக்தியை சவப்பெட்டிக்குள் போடலாம் என கூறுகிறார். அப்போது அவர் போனுக்கு ஒரு வீடியோ வருகிறது.
34
ஜனனியை எச்சரிக்கும் ராமசாமி
அந்த வீடியோவில் ஜனனி, காட்டுக்குள் சக்தியின் ஆடைகள் கிடப்பதை பார்த்து கதறி அழுகிறார். இதன்மூலம் ஜனனி, தாங்கள் சக்தியை கடத்தி வைத்திருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து வந்துள்ளதை அறிந்த ராமசாமி மெய்யப்பன், ஜனனிக்கு போன் போட்டு, எங்க இருக்கேன்னு சொன்ன என கேட்க, அதற்கு ஜனனி, நான் எங்க இருந்தா உனக்கு என்ன என சொல்ல, பொய்யாடி சொல்ற, என்னை புத்திசாலித்தனமா டிராக் பண்ணுவதாக நினைக்குறியா... நாங்க இருக்க காட்டை கண்டுபிடிட்டியா... ஆனால் உன்னுடைய புருஷனை உன்னால் காப்பாற்ற முடியாது என சொல்கிறார் ராமசாமி.
அவன் இப்போ சாகப்போகிறான் என்று மிரட்டுகிறார். இதனால் பதறிப்போகும் ஜனனி, ப்ளீஸ் அவனை எதுவும் பண்ணாத என கெஞ்சுகிறார். இதுக்குமேல நீ சொல்றத கேக்குறதுக்கு நான் என்ன கேனையனா என கேட்கும் ராமசாமியிடம் மன்னிப்பு கேட்கும் ஜனனி, நான் இப்போவே கிளம்பி வீடியோ கொண்டுவருவதாக சொல்கிறார். உடனே அவர், இந்த வீடியோவுக்காகலாம் நான் அவனை விடமாட்டேன். முதலில் என்னுடைய பேக்டரி விஷயத்தை முடிச்சுவிடு. உடனே உன்னுடைய வக்கீலுக்கு போன் பண்ணி என்னோட பேக்டரி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறச் சொல் என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.