Actor Suriya
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ம் தேதி உலக அளவில் சுமார் 11,500 திரையரங்குகளில் 38 மொழிகளில் வெளியானது. தமிழ் மொழியில் இருக்கும் சூர்யாவின் குரலையே, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மீதமுள்ள 37 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சுமார் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம், இப்போது இன்னும் 350 கோடியை கூட தாண்ட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. வருகின்ற டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் OTTயில் நேரடியாக வெளியாக உள்ளது.
டபுள் எவிக்ஷனா! பிக் பாஸ் வீட்டைவிட்டு ஜோடியாக எலிமினேட் ஆகப்போவது யார்?
Kanguva
அண்மையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதில் தமிழ் சினிமாவில் உள்ள இரண்டு டாப் நடிகர்களுடைய ரசிகர்கள் தான், கங்குவா திரைப்படத்தை திட்டமிட்டு தோற்கடித்ததாக பேசி இருந்தார். அது மட்டும் அல்லாமல் நடிகர் சூர்யா பேசும் அரசியல் பிடிக்காத இரண்டு முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த சூழலில் "புறநானூறு" திரைப்படத்தை சூர்யா கைவிட்டதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்கள் வலைப்பேச்சு யூட்யூப் சேனல் பிரபலங்கள்.
Amaran
வலைப்பேச்சு யூடியூப் சேனலில் வெளியிட்ட தகவலின் படி புறநானூறு திரைப்படத்தை சூர்யா நடித்து முடித்த பிறகு தான் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ள கர்ணா திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஆயத்தமாக இருந்ததாகவும். ஆனால் புறநானூறு திரைப்படத்தின் மையக்கருத்தி ஹிந்தி திணிப்பை எதிர்த்து இருக்கிறது என்பதனால், சூர்யா புறநானூறு படத்தில் நடிப்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. அந்த திரைப்படத்தில் நடித்துவிட்டு அவரால் எப்படி அந்த பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க முடியும் என்று ஜோதிகாவும், சூர்யாவும் கலந்தாலோசித்து ஒரு கட்டத்தில் புறநானூறு திரைப்படத்தை, கர்ணா திரைப்படத்திற்காக சூர்யா தவிர்த்ததாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு வீடியோவில் கூறப்பட்டிருக்கிறது.
Purananooru
மேலும் இப்பொது கர்ணா படம் உருவாகுவது சந்தேகத்துக்கு இடமாக மாறி உள்ள நிலையில், மீண்டும் சுதா கொங்காரவை அழைத்து பேசிய நடிகர் சூர்யா, தான் மீண்டும் அந்த திரைப்படத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாக கூறியதாகவும். ஆனால் ஏற்கனவே சூர்யா வேண்டாம் என்று மறுத்து விட்டதாலும் மேலும் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாலும் சுதா கொங்கரா சூர்யாவிற்கு நோ சொல்லிவிட்டதாகவும் வலைப்பேச்சில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமியை சந்தித்த விஜய் என்ன சொன்னார் தெரியுமா?