சூர்யா இல்லை... ‘வேள்பாரி’க்காக வேறு மாநில நடிகரை ஒப்பந்தம் செய்த ஷங்கர் - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

First Published | Sep 11, 2022, 11:16 AM IST

ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்கிற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்தியன் 2 பட ஷூட்டிங்கிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள சரித்திர படம் குறித்த தகவல் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதன்படி அவர் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் கதையை மையமாக வைத்து சரித்திர படம் இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இப்படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

Tap to resize

அதுமட்டுமின்றி கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய சூர்யா, வேள்பாரி கதையைப் பற்றியும் சில வார்த்தைகள் கூறினார். அந்த விழாவில் இயக்குனர் ஷங்கரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதால், அவர் தற்போது இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்... பாகுபலி நாயகன் பிரபாஸின் குடும்பத்தில் முக்கிய பிரபலம் மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இந்நிலையில், ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி கதையில் சூர்யா நாயகனாக நடிக்கப்போவதில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக இயக்குனர் ஷங்கர், கே.ஜி.எஃப் நடிகர் யாஷை தான் தேர்வு செய்துள்ளாராம். இந்தப் படம் தொடர்பாக இருவரும் சமீபத்தில் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதால், இதனை ஒரே தயாரிப்பாளரை வைத்து எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதால், சில முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த படத்தை எடுக்க உள்ளார்களாம். அதில் பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் உண்டு என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!