திருச்சியை சேர்ந்தவர்கள் கோபி - சுதாகர். நெருங்கிய நண்பர்களான இவர் கல்லூரியில் ஒன்றாக படித்து, பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்து பல்வேறு சேனல்களில் வாய்ப்பு தேடினர். அவையெல்லாம் தோல்வியில் முடிந்ததை அடுத்து யூடியூப் சேனலில் அரசியல் தலைவர்களைப் போல் மிமிக்ரி செய்து வீடியோ வெளியிடத் தொடங்கினர்.
இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து அவர்கள் பணியாற்றிய யூடியூப் சேனல் அசுர வளர்ச்சி கண்டது. பின்னர் தனியாக பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனல்களைத் தொடங்கி, அதில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் ஒவ்வொன்று வைரல் ஹிட் ஆனதை அடுத்து, அந்த சேனலும் குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்களைப் பெற்றது.
இவர்களில் சுதாகர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார். இதையடுத்து கோபிக்கு எப்போது திருமணம் ஆகும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக குட் நியூஸ் சொன்னார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்து முடிந்துள்ள கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியுடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கோபியின் திருமண புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.