ஆம்பளைங்களும் மேகியும் ஒன்னு... நடிகை ரெஜினா சொன்ன அடல்ட் ஜோக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்

First Published | Sep 11, 2022, 8:53 AM IST

Regina : நடிகை ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீசான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. இதன்பின் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் அவர் நடித்து வந்தாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது கூட ஷாகினி டாகினி என்கிற படத்தில் நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமே விவாகரத்து பயம் தான்... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிம்பு

Tap to resize

இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நடிகைகள் நிவேதா தாம்ஸ் மற்றும் ரெஜினா இருவரும் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை சொல்லி ஷாக் கொடுத்துள்ளார். அந்த ஜோக் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.

அந்த பேட்டியில் சாப்பிட்டபடியே பேசியுள்ள ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன் என கூறிவிட்டு, ஆண்களும் மேகியும் ஒன்று, இரண்டு இரு நிமிடங்களில் முடிந்துவிடும் என இரட்டை அர்த்தத்தில் கூறியுள்ளார். அருகில் இருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரெஜினாவை பலவிதமான மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விமர்சனங்களை கடந்து ஒரே நாளில் வசூலை குவித்த பிரம்மாஸ்திர.. எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!