Rolex Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த ரோலெக்ஸ் படம் பற்றி நடிகர் சூர்யா முதன்முறையாக மனம்திறந்து பேசி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சென்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'கைதி' படத்தின் கதைக்களத்தை 'விக்ரம்' படத்துடன் இணைத்து, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU)-ஐ அவர் உருவாக்கிய பிறகு, அதன் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக, 'விக்ரம்' படத்தின் இறுதிக்காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி மிரட்டலான தாக்கத்தை ஏற்படுத்திய 'ரோலெக்ஸ்' கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.
25
ரோலெக்ஸ் பட என்ன ஆச்சு?
சூர்யாவின் அந்த வித்தியாசமான தோற்றமும், அவரது ஆக்ரோஷமான நடிப்பும் தனி படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது. இதையடுத்து, ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தனி திரைப்படம் உருவாகும் என லோகேஷ் கனகராஜ் முன்பே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா'வுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் ரோலெக்ஸ் படம் குறித்து சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ரோலெக்ஸ் படம் குறித்து என்னைவிட லோகேஷுக்குத்தான் தெளிவாக தெரியும். அவர் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சரியான நேரம் வந்தால் அந்த படம் நிச்சயமாக உருவாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இப்போது அவர் அல்லு அர்ஜுனுடன் புதிய படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன்பிறகு 'விக்ரம் 2' படமும் உள்ளது. பேட்டிகளில் ரோலெக்ஸ் படத்தின் திரைக்கதை வேலைகள் நடந்து வருவதாக அவர் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் சரியான நேரம் இருக்கிறது. அந்த நேரம் வரும்போது ரோலெக்ஸ் படமும் நடக்கும்" என சூர்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'ரோலெக்ஸ்' திரைப்படம் உடனடியாக தொடங்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், லோகேஷின் தற்போதைய படங்கள் முடிந்த பிறகே அந்த படம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சூர்யா தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாமிதா பைஜு நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
55
சாதனை படைத்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி' ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படம் வெளியாகும் முன்பே சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சூர்யா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.