Pradeep Rawat: 'கஜினி', 'வீரம்', 'ஜில்லா' வில்லன் நடிகர் பிரதீப் ராவத் திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம்

Published : Aug 04, 2026, 10:15 PM IST

Pradeep Rawat: இந்திய திரையுலகின் மூத்த நடிகரும், தமிழ் ரசிகர்களின் மனதில் வில்லன் கதாபாத்திரங்களால் அழியாத இடம்பிடித்தவருமான பிரதீப் ராவத் (74) காலமானார்.

PREV
15
பிரதீப் ராவத் காலமானார்

இந்திய திரையுலகின் மூத்த நடிகரும், பல மொழித் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனித்துவமான முத்திரை பதித்தவருமான பிரதீப் ராவத் (74) காலமானார். ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 4 மாலை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவு செய்தியை நடிகர் யஷ்பால் ஷர்மா சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

25
கஜினி வில்லன் பிரதீப் ராவத்

பிரதீப் ராவத் தனது கலைப் பயணத்தை பி.ஆர். சோப்ராவின் 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் 'லகான்' திரைப்படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். ஆனால் தமிழ் ரசிகர்களின் மனதில் அவருக்கு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்த திரைப்படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கஜினி'. சூர்யாவுக்கு எதிராக அவர் நடித்த கொடூர வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே காரணத்தால், அமீர் கான் நடித்த இந்தி ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

35
மூத்த நடிகர் பிரதீப் ராவத் மரணம்

தமிழ் சினிமாவில் 'தொட்டி ஜெயா', 'சபரி', 'அசல்', 'ராஜபாட்டை', 'வீரம்', 'ஜில்லா', 'மிரட்டல்', 'எலி', 'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் வலுவான வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். உயரமான தோற்றம், கம்பீரமான உடல்மொழி, வலிமையான குரல் மற்றும் மிரட்டலான திரைநடிப்பு ஆகியவை அவரை இந்திய சினிமாவின் தனித்துவமான வில்லன் நடிகர்களில் ஒருவராக மாற்றின.

45
சிறந்த வில்லன் நடிகர்

தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்த, தெலுங்கு திரைப்படமான 'சையே' படத்திற்காக சிறந்த வில்லன் விருதையும் பெற்றிருந்தார்.

55
ரசிகர்கள் அஞ்சலி

பிரதீப் ராவத்தின் மறைவு இந்திய திரையுலகுக்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்களின் நினைவில் 'கஜினி' வில்லனாக அவர் என்றும் வாழ்வார் என்ற வகையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories