Retro Day 2 Box Office Collection: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தன்னுடைய ஒவ்வொரு படத்தின் கதையிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் ரூ.2000 கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி முகத்தை கண்டு வரும் சூர்யா கண்டிப்பாக அடுத்ததாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டார்.
25
மே 1-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது ரெட்ரோ
இந்நிலையில், சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த அவரது 44-வது திரைப்படமான 'ரெட்ரோ' மே 1-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இதில் சூர்யா கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், சிங்கம் புலி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
35
கனிமா பாடல்
இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களது சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கனிமா பாடல்... ட்ரெண்டிங் பாடலாக மாறிய நிலையில், பலர் இந்த பாடலுக்கு ரீலிஸ் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும், ரூ.17.25 கோடி வசூல் செய்ததாகவும், முதல் நாளில் உலக அளவில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
55
ரூ.50 கோடியை நெருங்கிய இரண்டாவது நாள் வசூல்:
அதன்படி 'ரெட்ரோ' திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூல் குறைவு என்றாலும் ரூ. 50 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய முழு விவரம் வெளியாகவில்லை. மேலும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால்... வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விமர்சனம் கொஞ்சம் டல் என்றாலும் சூர்யா ரெட்ரோ வசூலில் மாஸ் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.