நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்கள் என்றால் அது பாலாவும், ஹரியும் தான். இதில் ஹரி இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் சூர்யா. அவர் இயக்கத்தில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த 5 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள்.
இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கடந்த 2017-ம் ஆண்டு சிங்கம் படத்தின் 3-ம் பாகம் ரிலீசானது. இப்படத்தின் வெற்றிக்கு பின் அருவா படத்திற்காக சூர்யாவும், ஹரியும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அப்படத்தை கைவிட்டு விட்டனர்.
இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் 4-ம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். தற்போது கைவசம் உள்ள சிறுத்தை சிவா படம், வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்துவிட்டு சூர்யா சிங்கம் படத்தின் 4-ம் பாகத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் அடி தடி..! போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!