‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்

First Published | Nov 10, 2022, 7:35 AM IST

லவ் டுடே படத்தின் காட்சி ஒன்றை பயன்படுத்தி தஞ்சாவூர் போலீசார் விழிப்புணர்வுக்காக போட்டுள்ள மீம் ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டே நாளில் அதைவிட டபுள் மடங்கு வசூலித்துவிட்டது. இயக்குனர் பிரதீப் நடித்துள்ள முதல் படத்துக்கே இவ்ளோ வரவேற்பா என கோலிவுட்டே வியந்து பார்த்து வருகிறது.

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே அப்படத்தின் கான்செப்டும், கதாபாத்திரங்களும் தான். சத்யராஜ், ராதிகா தொடங்கி சின்ன சின்ன வேடங்களில் நடித்த இளம் நடிகர்கள் வரை அனைவருமே தங்களது ரோலை சிறப்பாக செய்திருந்தனர். அதோடு படம் பார்க்கும் அனைவரும் தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் பல்வேறு காட்சிகள் இருந்ததும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

Tap to resize

தமிழில் லவ் டுடே படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வரும் நிலையில், இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் பணியும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தான் இப்படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார். அங்கு 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... திருமண நாளில் ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு... அட்லி மனைவி பிரியா போட்ட காதல் பதிவு!

இது ஒருபுறம் இருக்க, லவ் டுடே படத்தின் காட்சி ஒன்றை தஞ்சாவூர் போலீசார் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ள சம்பவமும் அரங்கேறி உள்ளது. மீம்ஸ் மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் லவ் டுடே படத்தின் ஒரு காட்சியில் நாயகன் பிரதீப்பிடம் அவரது காதலியாக நடித்துள்ள இவானா, தனக்கு ஆன்லைனின் நிறைய ஆபாச மெசேஜ் வருவதாக கூறுவார். இதற்கு பிரதீப், பிளாக் பண்ணிடு, நமக்கெல்லாம் சைபர் புகார் எப்படி கொடுக்கணும்னு கூட தெரியாது என கூறி இருப்பார். 

இந்த காட்சியை அப்படியே பயன்படுத்தி, அதான் 1930 என்கிற எண்ணிற்கு கால் பண்ணினால் உடனே சைபர் போலீஸில் புகார் கொடுக்கலாமே என மீம் ஒன்றை உருவாக்கி அதனை தஞ்சாவூர் போலீஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப் அதனை ஷேர் செய்து, இது எனது நாளை இனிமையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...  VTK 50th Day Celebration: 'வெந்து தணிந்தது காடு' 50ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு! புகைப்படங்கள்!

Latest Videos

click me!