தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அட்லி. 'ராஜா ராணி' படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து, தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில், ஆகிய 3 படங்களை இயக்கிய அட்லி, தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார், நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கோலிவுட் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் கதை விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதையை ஒற்று இருப்பதாக தயாரிப்பாளர் ஒருவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ஏற்கனவே சில காப்பி கதை சர்ச்சையில் சிக்கிய அட்லியை இந்த தகவலை வைத்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் அடி தடி..! போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்று இயக்குனர் அட்லி தன்னுடைய மனைவி பிரியாவுடன் தன்னுடைய 8 ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சந்தோஷமான நாளில் அட்லி மனைவி ப்ரியா... ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தன்னுடைய கணவருக்கு காதலால் உருகியபடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... 'எட்டு வருடங்கள் கழிந்து விட்டது... என்றைக்கும் இதே போல் இருக்க வேண்டும். நான் நீசிக்கும் என் கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் தான் என்னுடைய பலவீனம், அதேபோல் நீங்கள் தான் என்னுடைய பலமாகவும் இருக்கிறீர்கள். என்னுடைய எல்லாமே நீங்கள்தான்... என்றும் உங்களை காதலிக்கிறேன் என தெரிவித்துள்ளார்'. இந்த பதிவும் புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் அட்லி - பிரியா தம்பதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Biggboss: பொய் சொல்லி வசமாக சிக்கிய தனலட்சுமி! அப்பா கூட இல்லனு சொல்லிட்டு அவர் கூடவே ரீல்ஸ்.. வெளியான வீடியோ!