'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சுத்தி இத்னானி நடித்திருந்தார்.
முத்து என்கிற கிராமத்து இளைஞன் மும்பைக்கு சென்று எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆக உருவாகிறார் என்பதை மிகவும் ஆழமான கதையுடன் இந்த படம் கூறியது.
குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல், தற்போது வரை ரசிகர்கள் பலரது காலர் டியூன் ஆக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று படக்குழு ஐம்பதாவது நாள் வெற்றி விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ஓடிடி யில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.