பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சற்று டல் அடித்தாலும், இந்த வாரம் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இன்றைய ப்ரோமோவில் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடையே நடக்கும் பிரச்சனை குறித்து காட்டப்பட்டிருந்தது. இருவரும் குறும்படம் போட வேண்டும் என்கிற அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டனர்.