ரஜினிகாந்த் டூ கார்த்தி... தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published Dec 3, 2020, 4:59 PM IST

தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த்:தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதலிடம் என்றாலே அது சூப்பர் ஸ்டாருக்கு தான். தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கிறார். ஸ்டைல், பஞ்ச் டைலாக்கால் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். சம்பளத்தின் அடிப்படையிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் வகையிலும் ரஜினிகாந்த் தான் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
undefined
விஜய்:இரண்டாவது இடத்தில் தளபதி விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக ரசிகர்களால் போற்றப்படுகிறார். கடந்த முறை தீபாவளி விருந்தாக வெளியாகின பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூலானது தென்னிந்திய திரையுலகை திகைக்க வைத்தது. ஒரு படத்திற்கு 45 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
undefined
அஜித்:மூன்றாவது இடத்தில் தல அஜித். வெற்றி, தோல்விகளை சரிசமாக பார்த்து வரும் அஜித்திற்கு கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆண்டாகவே அமைந்தது விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து ஹிட்களை குவித்தார். தற்போது தல-யின் வலிமை பட ரிலீசுக்காக ரசிகர்கள் மரணம் வெயிட்டிங்கில் உள்ளன. தல அஜித் ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
undefined
கமல் ஹாசன்:இந்த பட்டியலில் உலக நாயகன் 4வது இடத்தை பிடித்துள்ளார். கமல் ஹாசன் ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் ரூ.25 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக தெரிகிறது.
undefined
சூர்யா:சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் பல்வேறு சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் பாராட்டும் அளவிற்கு சூரரைப் போற்று திரைப்படம் பெருமை சேர்ந்துள்ளது. சூர்யா ஒரு படத்திற்கு ரூ.20 முதல் ரூ.22 கோடி வரை சம்பளம் கேட்பதால் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
undefined
விக்ரம்:54 வயதிலும் சும்மா சிக்ஸ்பேக் உடற்கட்டோடு இளம் நடிகர்களுகே டப் கொடுத்து வருகிறார் நம்ம சீயான் விக்ரம். தனது கடின உழைப்பால் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த விக்ரமிற்கு கடாரம் கொண்டான் திரைப்படம் மிகப்பெரிய சறுக்கலை கொடுத்துள்ளது. அதனால் தனது சம்பளத்தை ரூ.20 கோடியாக குறைத்துக் கொண்ட விக்ரம், இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
undefined
தனுஷ்:சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற தலைக்கணம் சிறுதும் இன்றி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் தனுஷ். The Extraordinary Journey of the Fakir என்ற படம் மூலமாக ஹாலிவுட் வரை உச்சம் தொட்டுள்ளார். இவருடைய சம்பளம் 15 கோடி ஆகும், அதனால் தான் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார்.
undefined
சிவகார்த்திகேயன்:டி.வி. ஆங்கர் டூ கோலிவுட் டாப் ஹீரோ இடத்திற்கு தனது கடின உழைப்பால் முன்னேறியவர் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் திரைப்படங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் ரூ.10 கோடி முதல் 12 கோடி வரை என்பதால் இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறார்.
undefined
விஜய் சேதுபதி:வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்குவதில் திறமையானவர் நம்ம மக்கள் செல்வன். தமிழை கடந்து இந்தி, தெலுங்கு என்றும் விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் உண்டு. அதேபோல் ரசிகர்கள் பட்டாளமும் எக்கச்சக்கம். தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏராளம். என்ன தான் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் ரூ.8 கோடி முதல் 10 கோடி வரையே. அதனால் இந்த பட்டியலில் அவர் 9வது இடத்தில் இருக்கிறார்.
undefined
விஜய் சேதுபதி:வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்குவதில் திறமையானவர் நம்ம மக்கள் செல்வன். தமிழை கடந்து இந்தி, தெலுங்கு என்றும் விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் உண்டு. அதேபோல் ரசிகர்கள் பட்டாளமும் எக்கச்சக்கம். தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏராளம். என்ன தான் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் ரூ.8 கோடி முதல் 10 கோடி வரையே. அதனால் இந்த பட்டியலில் அவர் 9வது இடத்தில் இருக்கிறார்.
undefined
click me!