"சூர்யா.. உங்க அன்பிற்கும்.. பாசத்திற்கும் ரொம்ப நன்றி" - வாழ்த்தி பேசிய ரஜினிகாந்த்!

First Published | Sep 1, 2024, 7:58 PM IST

Rajinikanth : இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நடிகர் சூர்யாவை பாராட்டி பேசி அவருடைய கங்குவா திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Kanguva

பிரபல நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் தான் கங்குவா. உலக அளவில் சுமார் 38 மொழிகளில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாகவில்லை.

"ரஜினிகாந்த்.. தமிழ் சினிமாவின் அடையாளம்" - மனம் திறந்த நடிகர் சூர்யா - வைரலாகும் வீடியோ!

Vettaiyan Vs Kanguva

இந்த சூழலில் நேற்று நடிகர் கார்த்தி மற்றும் மூத்த நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள "மெய்யழகன்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா, பட குழுவினரை வாழ்த்தி பேசினார். அதன்பிறகு கங்குவா திரைப்படம் குறித்து பேசிய அவர், இது சுமார் இரண்டரை வருட காலம், ஆயிரத்திற்கும் அதிகமான கலைஞர்களுடைய உழைப்பு நிறைந்த ஒரு படைப்பு. "கங்குவா" என்பது ஒரு குழந்தை, அது பிறக்கும் நாளினை, நாம் அனைவரும் நிச்சயம் கொண்டாட வேண்டும். ஆனால் அதே நேரம் போட்டி என்ற ஒன்று இந்த விஷயத்தில் வந்துவிடவே கூடாது.

Tap to resize

Vettaiyan Movie

நடிகர் ரஜினிகாந்த் நாம் குழந்தையாக இருந்த காலத்திலேயே தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். கடந்த 50 ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விளங்கிவரும் அவரோடு நாம் போட்டியிடுவது சரியான விஷயமாக இருக்காது. "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் நிலையில் அந்த தேதியில் இருந்து விலகி நமது கங்குவா திரைப்படம் விரைவில் உங்களுக்கு விருந்தாக அளிக்கப்படும் என்று கூறினார்.

Rajinikanth

இந்நிலையில் இன்று "கூலி" திரைப்பட படப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட பொழுது, நடிகர் சூர்யாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் எனது நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய கங்குவா திரைப்படம் நிச்சயம் வெற்றி அடைய நான் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கணவர் இல்லாமல் தனியே சுவாமி தரிசனம்.. திருப்பதி சென்று வந்த ஹன்சிகா மோத்வானி - Viral Video!

Latest Videos

click me!