ஆந்திராவைச் சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமின்றி திறமையான நடனக் கலைஞராகவும் ஜொலித்தார். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீப காலமாக சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்த பானுப்ரியா, தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.