அதேபோல முதல் முறையாக கோலிவுட் உலகில் கால் பதிக்கும் பிரபல மலையாள திரைப்பட நடிகர் சௌபின் ஷாகிர், "தயால்" என்ற கதாபாத்திரத்தில் "கூலி" திரைப்படத்தில் நடித்து வருவது குறித்த தகவலையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். நடிகர் சௌபின், அண்மையில் வெளியாகி மெகா ஹிட்டான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.