பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சில காலம் தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நஸ்ரியா நஜிம். கேரளாவில் பிறந்து வளர்ந்த நஸ்ரியா, மலையாள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவயது முதலிலேயே தொகுப்பாளராக பயணித்து வந்தார். அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தமிழில் "நேரம்" என்கின்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.