நடிகை சார்மிளா, இதுவரை 28 பேர் தன்னை பாலியல் ரீதியாக வன்புணர்வு பண்ண முயற்சித்துள்ளதாக கூறியுள்ளது, தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள திரையுலகில் இருந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மிளா. இயக்குனர் சுந்தர் ராஜன் இயக்கிய "ஒயிலாட்டம்" என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், பின்னர் மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தியதால் தமிழில் கவனம் செலுத்தவில்லை. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... வில்லன் நடிகர் 'பாபு ஆண்டனி' என்பவரை காதலித்து அவரிடம் இருந்து பிரிந்தார்.
26
Charmila Sad Life
அதன் பின் மலையாள சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றிய 'கிஷோர் சந்தியாவை' காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய மகனுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய பிழைப்புக்காக மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சார்மிளா... தற்போது மலையாள திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் வின்முறைய கூறி அதிர வைத்துள்ளார். இதுவரை தன்னை 28 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் ஒவ்வொரு முறையில் அதில் இருந்து நான் தப்பினேன் என கூறியுள்ளார்.
46
Vishnu Confirm Charmila Allegation
இதில் இயக்குனர் ஹரிஹரன் பற்றி இவர் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டை நடிகர் விஷ்ணு உறுதி செய்துள்ளார். சார்மிளா அட்ஜஸ்ட் செய்ய தயாரா என்று ஹரிஹரன் கேட்டதாக ஏசியாநெட் நியூஸிடம் விஷ்ணு தெரிவித்துள்ளார். 'பரிணயம்' படத்தின் விவாதத்தின் போது ஹரிஹரன் இப்படி கேட்டதாகவும், அவர் இப்படி நடந்து கொள்வதை பார்த்து நானும் சார்மிளாவும் அதிர்ந்து போனோம். இதை ஹரிஹரனிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பின்னர் என்னிடம் அட்ஜஸ்ட் செய்யாதவர்கள் என் படத்தில் இருக்கக் கூடாது என்று ஹரிஹரன் உறுதியாகக் இருந்ததால், சார்மிளா அந்த பட வாய்ப்பை இழந்ததாகவும் கூறியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் சார்மிளா மட்டும் இன்றி பல நடிகைகள் அடுத்தடுத்து தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தி வருவதால்.. பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரும் என தெரிகிறது.
66
Shocking Incident
இதை தொடர்ந்து, அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் நண்பர்கள் தன்னை காம பசிக்கு இரையாக்க நினைத்ததாகவும் அங்கிருந்து என் உறவினர்கள் மூலம் தப்பியதாக கூறியுள்ள சார்மிளா... மீண்டும் அவர் ஹோட்டலில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது... ஆட்டோவில் ஏறி தப்பி வீட்டுக்கு வந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.