பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்கும் நாக சைதன்யா - சோபிதா! ஆச்சர்ய தகவல்!

First Published | Sep 1, 2024, 11:54 AM IST

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி இன்று முதல் துவங்க உள்ள நிலையில், இதில் சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஜோடியாக பங்கேற்க உள்ளதாக ஆச்சர்ய தகவல் ஒன்று தெலுங்கு மீடியாக்களில் உலா வருகிறது.
 

BiggBoss Telugu

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, இன்று முதல் துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்... பிரபலங்கள் பற்றிய தகவல்கள், தொடர்ந்து ஒருபுறம் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத இரண்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது. 

Bigg Boss Telugu 8

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு விட்டாலே... மற்ற நிகழ்ச்சிகள் TRP ரேட்டிங்கில் சற்று டல்லடிக்க துவங்கிவிடும். தெலுங்கிலும் இதே நிலை தொடர்வதையடுத்து, இன்று துவங்க துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக.. தொகுப்பாளர் நாகர்ஜுனா புதிய பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!
 

Tap to resize

Naga Chaitanya and sobhita dhulipala

அதன்படி, சமீபத்தில் தன்னுடைய திருமண நிச்சயம் செய்து கொண்ட, மகன் நாக சைதன்யாவையும், வருங்கால மருமகன் சோபிதா துலிபாலாவையும் பிக்பாஸ் புரோமோஷனுக்காக பிக்பாஸ் சீசன் 8- நிகழ்ச்சியின் வீட்டிற்குள்ளே, சிறப்பு விருந்தினர்களாக அனுப்புகிறாராம். 

Naga Chaitanya go to Biggboss house

சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ள நாக சைத்தாயா மற்றும் சோபிதா பற்றிய விவகாரம் தற்போது வரை பேசும் பொருளாக இருந்து வரும் நிலையில், TRPயை குறிவைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா - சோபிதா இதுவரை ஜோடியாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில், பிக்பாஸ் உள்ளே ஜோடியாக சென்றால் அது பிக்பாஸ் ரேட்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்தார் மோகன் லால்? கொளுத்தி போட்ட பிரபலம்!
 

Samantha Anchoring Biggboos

கடந்த காலங்களில், நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு வெளிநாட்டிற்கு சென்ற போது... அவரது முன்னாள் மருமகள்... சைதுவின் முன்னாள் மனைவியான... நட்சத்திர நாயகி சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். அந்த எபிசோடுகள் நல்ல ரேட்டிங்குகளையும் பெற்றன. இந்த நேரத்தில், நாகார்ஜுனா தனது வருங்கால மருமகளை தனது மகன் சைதன்யாவுடன் பிக் பாஸ் மேடைக்கு மீண்டும் கொண்டு வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Latest Videos

click me!