என் ரூமுக்குள் நுழைந்தார் தயாரிப்பாளர்.! குஷ்பு செய்த வேற லெவல் செம்ம சம்பவம்.!

First Published | Sep 1, 2024, 1:19 PM IST

நடிகை குஷ்பு ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து, பிரபல தனியார் யூ டியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில், தன்னுடைய ரூமுக்குள் நுழைந்த தயாரிப்பாளர் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

Kushboo about Adjustment Problem

வயநாடு பிரச்சனைக்கு பின்னர், ஹேமா கமிட்டி அறிக்கை கேரளா பற்றி அதிகம் பேச வைத்துள்ளது. பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவின் நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டும் இன்றி... தன்னுடைய ரூமுக்குள் நுழைந்த தயாரிப்பாளர் பற்றியும் பேசியுள்ளார்.
 

Rangaraj Pandey Interview

குஷ்பு நடிகை என்பதை தாண்டி, பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளுக்கு இதுவரை குஷ்பூ குரல் கொடுத்துள்ள நிலையில், கேரளாவில் புயலை கிளம்பியுள்ள ஹேமா கமிட்டி குறித்த தன்னுடைய ஆதங்கத்தை காட்டியுள்ளார். தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே, ஹேமா கமிட்டி அறிக்கை வயநாடு பிரச்னையை மறைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியதற்கு  குஷ்பூ கண்டிப்பாக இல்லை என்றும். அது ஒரு இயற்க்கை பேரிடர் ஆனால் இது பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை விஷயம் இதற்கும் அதற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்கும் நாக சைதன்யா - சோபிதா! ஆச்சர்ய தகவல்!
 

Tap to resize

Wayanad Issue

தொடர்ந்து பேசிய செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே... வயநாடு பேரிடர் பிரச்சனை, ஒரு மாதம் ஆகியும் இன்னும் சரி இல்லையப்படாத நிலையில், இதுகுறித்த பேச்சுகளை திசை திருப்பதான்... சுமார் 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா வெளியிட்ட அறிக்கை சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது வெளியிடப்பட்டதாக அடிபடும் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு.... இது கேரள அரசு எடுத்த முடிவு. அதில் நாம் தலையிட முடியாது என்றாலும், இந்த இரண்டு பிரச்சனையின் அடிப்படையே வெவ்வேறானது என கூறினார்.
 

Hema Committee

மேலும் பல வருடங்கள் கழித்து தங்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனை குறித்து பேசும் நடிகைகள் ஏன் முதலில் இதை பேசவில்லை என கேட்க, சினிமாவில் மட்டும் அல்ல எந்த ஒரு துறையிலும்... குறிப்பாக பெண்களுக்கு எல்லா விஷயங்களுக்கும், நோ என்று சொல்கிற தைரியம் இருப்பது இல்லை. என கூறி தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பிரச்சனை குறித்து குஷ்பு கூறினார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!
 

Kushbhu Met Harassment

இளம் வயதில் தான் நடித்த படம் ஒன்றின் தயாரிப்பாளர் என் ரூமுக்கு வந்து, அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைப்பது போல் உங்களுக்கு இந்த கேரட்கர் சரியாக இருக்கும் என தோன்றவில்லையே என பிட்டு போட... கடுப்பான குஷ்பு தன்னுடைய காலில் இருந்த செருப்பை கழட்டி, என் செருப்பு சைஸ் 41 மேக்கப் ரூமில் அடிக்கவா? அல்லது யூனிட் முன்பு அடி வாங்குறீங்களா? என கேட்டேன் என கூறியுள்ளார்.
 

Shocking Truth

இந்த பேட்டியில் நடிகைகள் பக்கம் உள்ள நியாயத்தையும்... அப்படியே அவர்கள் அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒப்புக்கொண்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் குடும்ப சூழல் குறித்த பின்னணி எப்படி இருக்கும் என்பதை குஷ்பு இந்த பேட்டியில் பேசியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்தார் மோகன் லால்? கொளுத்தி போட்ட பிரபலம்!
 

Latest Videos

click me!