'குக் வித் கோமாளி' மைம் கோபி வீட்டில் நேர்ந்த மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

First Published | Sep 1, 2024, 5:25 PM IST

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் இருக்கும் மைம் கோபியின் தாயார் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
 

Mime Gopi Debut Tamil movie

மைம் கலை கற்று ஒரு மேடை நடிகராக பிரபலமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் மைம் கோபி. சென்னையைச் சேர்ந்த இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும்' என்கிற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் ஆடாத ஆட்டம், துரோகி, உயர்திரு 420, வாயை மூடி பேசவும், மெட்ராஸ், கயல், என்னமோ நடக்குது, போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்தார்.

Madras Movie

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், மெட்ராஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது. இதன் பின்னர் மாரி, மாயா, கபாலி, பைரவா, என தொடர்ந்து பல முன்னணி நடிகர் - நடிகைகள் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

என் ரூமுக்குள் நுழைந்தார் தயாரிப்பாளர்.! குஷ்பு செய்த வேற லெவல் செம்ம சம்பவம்.!

Latest Videos


Mime Gopi Other Language Movies

கை நிறைய அரை டஜனுக்கும் அதிகமான படங்களுக்கும் படு பிஸியாக வலம் வரும் மைன் கோபி, சமீபத்தில் வெளியான சாமானியன், கருடன், வெப்பம், போன்ற படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ள மைன் கோபி... சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் சுந்தரியின் தந்தையாக ஒரு சிறு கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். அதை போல் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸலும் இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது .

Cook With Comali

கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டைட்டில் பட்டத்தை கைப்பற்றினார். நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தன்னுடைய மைம் கலையிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதோடு மட்டுமின்றி... பல மாணவர்களுக்கு இலவசமாக மைம் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தாயார் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் மைம் கோபிக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். மைம் கோபி அம்மா, மனைவி, குழந்தைகளுடன் கொளத்தூரில் வசித்து வரும் நிலையில் மைம் கோபியின் தாயார் உடல் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை இவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கா? செய்தியாளர் கேள்வியால் பொது இடத்தில் எகிறிய நடிகர் ஜீவா!

click me!