பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சி, இந்த முறை தமிழ் பிக்பாஸ் துவங்குவதற்கு முன்பே ஆரம்பமாகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சி பற்றிய பல சுவாரஸ்ய தகவல் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்ல உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றி பார்ப்போம்.
25
14 Contestant Enter Today
அதன்படி இந்த முறை மொத்தம் 14 பேர் இந்த பிக்பாஸ் சீசன் 8 தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், இவர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான சில பிரபலங்களும் உள்ளனர் என்பதால், நிகழ்ச்சி துவங்கும் முன்பே பிக்பாஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
35
Biggboss Season 8 Telugu Contestant
அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் அஃப்ரிட், யாஷ்மி கவுடா, கமெடியன் அபய், டான்சர் நைனிகா. நடிகர் ஆதித்ய ஓம், விஷ்ணு பிரியா, பிரிதிவிராஜ், மணிகண்டா, சோனியா, சீதா, சேகர் பாட்ஷா, பிபாகா, நிகில், பிரேரனா, ஆகியோர்.
ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் துவங்கினாலும் வயல் கார்டு மூலம் யாரும் எதிர்பாராத சிலர் உள்ளே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை இளம் வயது போட்டியாளர்கள் அதிகம் உள்ளதால் கண்டிப்பாக பிக்பாஸ் தெலுங்கில் இம்முறை காதல் கன்டென்ட் உருவாவது உறுதி என கூறப்படுகிறது.
55
Biggboss House
கடந்த முறை பிக்பாஸ் தமிழில் இடம்பெற்றது போல், இந்த முறை பிக்பாஸ் தெலுங்கில் இரண்டு வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் பிக்பாஸ் TRP-யை அதிகரிக்க சிறப்பு விருந்தினர்களாக நாகர்ஜுனா தன்னுடைய மகன் நாக சைதன்யா மற்றும் வருங்கால மருமகள் சோபிதாவை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.