நான்கு ஆண்டுகள் கழித்து நண்பர்களோடு.. இமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படங்கள்!

First Published | Aug 13, 2023, 7:06 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி தமிழகம் மட்டுமில்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் தான் ஜெயிலர்.

பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் குமார் முதல் முறையாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஜெயிலர் திரைப்படம். ஓய்வு பெற்று காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

ஜெயிலரில் டார்க் காமெடியில் கலக்கிய இந்த நபர் ஜிம் டிரெய்னரா... 12 வருட நண்பனை காத்திருந்து களமிறக்கிய நெல்சன்

இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில், உலக அளவில் சுமார் 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்ததாக ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Tap to resize

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்கு தயானந்த சரஸ்வதி சமாதியில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தனது நண்பர்களுடன் தனது இமயமலை பயணத்தை துவங்கினார்.

தற்பொழுது இமயமலையில் தனது இரண்டாவது நாளை கழித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல தனது நண்பர்களுடன் தனது பயணத்தை அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ

Latest Videos

click me!