15 லட்சம் வரி கட்டினால் தான் வீடு தருவாங்க: சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா!

First Published | Jan 1, 2025, 4:15 PM IST

Super Singer Season 9 Title Winner Aruna Sivaya : ரூ.15 லட்சம் வரி கட்டினால் தான் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற 60 லட்சம் மதிப்பிலான வீடு கிடைக்கும் என்று அருணா ரவீந்திரன் கூறியுள்ளார்.

Super Singer Season 9 Title Winner

Super Singer Season 9 Title Winner Aruna Sivaya : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முதல் 2023 ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வரையில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அருணா ரவீந்திரன் (அருணா சிவாயா) வெற்றி பெற்றார். இதையடுத்து அருணாவுக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதோடு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

Super Singer Season 9, Super Singer Season 9 Title Winner

2ஆவது பரிசு பிரியா ஜெர்சனுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பிரசன்னா ஆதிசேஷாவிற்கு ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. சினிமா மட்டுமின்றி பக்தி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் அருணா. இந்த சீசன் முடிந்து இப்போது ஒன்றரை வருடம் கடந்த நிலையில் அருணாவுக்கு வழங்கப்பட்ட வீடு இதுவரையில் கிடைக்கவில்லை. இது குறித்து அருணாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுத்தாங்க.

Tap to resize

Super Singer Season 9 Title Winner Aruna Sivaya

அதற்கு நாங்கள் இன்னும் வரி கட்டவில்லை. லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டும் என்பதால் இதுவரையில் நாங்கள் வரி கட்டவில்லை. இதற்கு காரணம், குடும்ப சூழல். கொஞ்சம் கொஞ்சமாக வரி கட்டி வருகிறோம். கூடிய விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்து அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவோம். அதற்காக ஒரு வருடம் நாங்கள் டைம் கேட்டிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Aruna Ravindran, Super Singer Season 9 Prize Money

அருணாவுக்கு பரிசாக வழங்கப்பட்ட வீட்டிற்கு ரூ.15 லட்சம் வரையில் வரி கட்ட வேண்டும். இது போன்று ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது உடனே அவர்களை சென்றடையும் வகையில் பரிசு தொகையோ, வீடோ இருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் வகையில் இருக்க கூடாது என்று அருணாவின் பேட்டிக்கு பிறகு பலரும் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Super Singer Season 9 Title Winner Prize

இதற்கு முன்னதாக செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரும் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதில் செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 சீசன்களாக சூப்பர் சிங்கர் டைட்டிலை ஆண்களே வென்ற நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் ஒரு பெண் டைட்டில் வின்னராக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

Latest Videos

click me!