கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ஆரம்ப காலகட்டத்தில் புகழ்பெற்ற ஆபாச பட நடிகையாக வலம் வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் கனடாவில் பிறந்து வளர்ந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியா வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை சன்னி லியோன் டேனியல் வைபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அதில் இரட்டை ஆண் குழந்தைகளை இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டது. இதுதவிர நிஷா கவுர் என்கிற பெண் குழந்தையும் சன்னி லியோனுக்கு உள்ளது.