இது ஒரு பான் இந்தியன் படம்; ஜேசன் சஞ்சய்யை எக்கச்சக்கமாக புகழ்ந்த ஹீரோ!

First Published | Nov 30, 2024, 8:26 PM IST

Jason Sanjay : தளபதி விஜயின் மகன் ஜேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள முதல் படம் குறித்து மனம் திறந்துள்ளார் அப்படத்தின் நாயகன் சந்தீப் கிசன்.

Sundeep Kishan

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் தளபதி விஜய். விரைவில் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு முழுமையாக குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் தலைவராக களமிறங்கவிருக்கிறார். ஏற்கனவே அவர் தன்னுடைய இறுதி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் மும்முறமாக ஈடுபட்டு வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் திரையுலகையை விட்டு விலகும் இந்த நேரத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய திரையுலக பயணத்தை இயக்குனராக இப்போது தொடங்கி இருக்கிறார்.

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய மக்கள் செல்வனின் மகாராஜா; முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

Jason Sanjay

வெளிநாடுகளுக்கு சென்று சினிமா சம்பந்தமான படிப்புகளை படித்து திரும்பி இருக்கிற ஜேசன் சஞ்சய், ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த சூழலில் பிரபல லைக்கா நறுமணம் தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அவர் பணியாற்றவிருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் நாயகனாக நடிக்க உள்ள நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகளில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கமிட்டானது குறித்தும் இந்த திரைப்படத்தின் கதை குறித்தும் விவரித்து இருக்கிறார் இப்படத்தின் நாயகன் சந்தீப் கிசன்.


Lyca Productions

நேற்று ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தீப் கிசன், தனுஷின் ராயன் பட படபிடிப்பிற்கு முன்னதாகவே நானும் ஜேசனும் இந்த திரைப்படம் குறித்து விவாதித்தோம். இது முழுக்க முழுக்க ஆக்ஷனும், Funணும் கலந்த ஒரு என்டர்டெய்னர் திரைப்படமாக நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் இந்த திரைப்படத்தை பற்றி என்னிடம் அவ்வளவு விரிவாக ஜேசன் விலக்கியது என்னை பிரமிக்க வைத்தது. அவர் மிகச் சிறந்த இயக்குனராக மாறவிருக்கிறார் என்பதை அவருடைய கதை சொல்லும் விதமே எனக்கு தெரிவித்தது.

Jason Sanjay Movie

பான் இந்தியா அளவில் இந்த திரைப்படம் இருக்கும், அவருடைய முதல் படத்தில் நான் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்க இருக்கிறது. ஒரு இயக்குனராக தன்னை மெருகேற்றி உள்ள ஜேசன் சஞ்சய் மிகச் சிறந்த திரைப்படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஒரே ஆண்டில் 35 படங்கள்; இன்றும் பல சாதனை படைக்கும் அந்த தென்னக நடிகர் யார் தெரியுமா?

Latest Videos

click me!