ஒரே ஆண்டில் 35 படங்கள்; இன்றும் பல சாதனை படைக்கும் அந்த தென்னக நடிகர் யார் தெரியுமா?

First Published | Nov 30, 2024, 5:44 PM IST

South Indian Actor : தென்னக நடிகர் ஒருவர் தனது திரையுலக பயணத்தில் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

South Indian Actor

இந்திய திரையுலகை பொருத்தவரை தென்னக நடிகர்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உலக அளவில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டின் எம்ஜிஆர், தெலுங்கு திரையுலகின் உலகின் ராமாராவ், மலையாள மொழியின் நெடுமுடி வேணு கன்னட சினிமாவின் ராஜ்குமார் என்று இந்திய திரை உலகத்தையே மிரட்டிய தென்னக நடிகர்கள் பலர் உண்டு. இன்றும் உலக அரங்கில் இந்திய சினிமாவை பொருத்தவரை தென்னக நடிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு இறந்து வருகிறது.

காஜல் அகர்வால் முதல் கீர்த்தி சுரேஷ் வரை; நண்பர்களையே காதலித்த தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட்!

Mammootty

அந்த வகையில் மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கடந்த 1971 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் தான் மம்மூட்டி. திரைத்துறையில் இவர் களமிறங்கிய போது அவருக்கு வயது 20, தொடக்க காலத்தில் பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், 1981 ஆம் ஆண்டுக்கு பிறகு மலையாள மொழி திரைப்படங்கள் இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று கூறினால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தையும் கடந்து இப்போது இவர் மலையாள மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகிறார். தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 1990 ஆம் ஆண்டு மது என்பவர் இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் இவர் அதிகமானார்.

Tap to resize

Actor Mammootty

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என்று நான்கு மொழி திரைப்படங்களிலும் இந்த 2024 ஆம் ஆண்டிலும் மிக மிக பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த 2024 ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இன்னும் ஒரு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டிலும் வெளியாகியுள்ள மூன்று திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

Bramayugam

இன்றும் புதுப்புது கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, கடந்த 1985 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான 35 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் கிட்டத்தட்ட 95% திரைப்படங்களில் அவர் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற சாதனையை இன்னும் சில நடிகர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுதும், சம்பள ரீதியிலும் திரைப்படத்தின் அளவு என்கின்ற கணக்கிலும் நடிகர் மம்மூட்டி மிக சிறந்த நடிகராக வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

ஐயப்பன் பாடல் சர்ச்சை; இசைவாணிக்கு எதிராக கொதித்த எம்.எஸ்.பாஸ்கர்!

Latest Videos

click me!