தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. கடந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமும் இதுதான். இதையடுத்து இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக, சுந்தர் சி இயக்கி நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு இருந்த மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தான் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகும்.
24
சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள்
தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது அவர் கைவசம் கேங்கர்ஸ் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் சுந்தர் சி உடன் வடிவேலுவும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர மூக்குத்தி அம்மன் 2, கலகலப்பு 3 மற்றும் விஷால் உடன் ஒரு படம் என சுந்தர் சி-யின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அவர் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தான் முதலில் தொடங்க உள்ளது.
இப்படத்தின் முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா தான் அதன் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்களாம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தை இயக்க சுந்தர் சி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
44
சுந்தர் சி சம்பளம்
மதகஜராஜா, அரண்மனை 4 என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளதால் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம் சுந்தர் சி. அதன்படி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இது இப்படத்தின் நாயகி நயன்தாரா கூட ரூ.12 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் அவரை விட சுந்தர் சி-க்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.