தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆனதால், சிறு பட்ஜெட் படங்களின் வெளியீடு என்பது குறைந்த அளவில் தான் இருந்தது. இந்த மாதம் முழுக்க பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களே திரைக்கு வர உள்ளன. அதன்படி நவம்பர் முதல் வாரத்தில் சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் ரிலீசாகி உள்ளன.
நேற்று இந்த மூன்று திரைப்படங்களும் ரிலீசாகின. இதில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே மற்றும் சுந்தர் சி-யில் காஃபி வித் காதல் ஆகிய இரண்டு படங்களுக்கு தான் அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஏனெனில் இந்த இரண்டு படங்களையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்.
இதையும் படியுங்கள்... ‘காஃபி வித் காதல்’ மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்தாரா சுந்தர் சி? - முழு விமர்சனம் இதோ