M N Nambiar : பழம்பெரும் நடிகர் நம்பியாரின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ

First Published Nov 5, 2022, 11:45 AM IST

நம்பியாரின்  குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகளுடன் அமர்ந்திருக்கிறார் எம்.என் நம்பியார்.

M N nambiar

பழம்பெரும் நடிகரான எம்.என் நம்பியார் வில்லத்தனத்தில் பிறப்பிடம் என பெயர் பெற்றவர். மலபாரை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அழியாதா அடையாளத்தை பதித்தவர். எட்டு சகாப்தங்கள் கடந்தும் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வைத்திருந்த வில்லன் தான் நம்பியார். இவர் எம்ஜிஆர் உடன் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், படகோட்டி, திருடாதே, காவல்காரன், குடியிருந்த கோவில் என அனைத்து படங்களும் வெற்றி படங்களாகவே இருந்தன. நாயகன் மட்டுமல்லாமல் வில்லனாக நம்பியாரும் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டார்.

M N nambiar

இவரது பாவனையும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. முதன் முதலாக பக்த ராமதாஸ் என்னும் படத்தில் நாயகனாக தோன்றினார். ஆனாலும் இவருக்கு நாயகன் வேடத்தை விட வில்லனுக்கான ரோலே அதிகமாக ஒத்துபோனதால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடிக்க ஆரம்பித்தார். வெறும் மூன்று ரூபாய்களை சம்பளமாக பெற்று தனது வ;வாழ்க்கை துவங்கிய நம்பியார் வரலாறு கூறும் வில்லனாக தன திறமையால் உயர்ந்தார்.

M N nambiar

50 களின் முற்பகுதியில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான திகம்பர சாமியார் என்னும் படத்தில் 11 வேடங்களில் நடித்து அப்போதே அசத்திருந்தா.ர் வேலைக்காரி, ஆயிரத்தில் ஒருவன், தில்லானா மோகனாம்பாள் என வில்லத்தனத்தின் மொத்த உருவத்தையும் கொட்டி தீர்த்து இருந்தார். வில்லன் கதாபாத்திரம் என்பதால் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் ஆவது புக்கிங் செய்து ஆகிவிடுவார்கள்.

M N nambiar

இன்று வரை இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகவே இருந்து வருகிறது. 90களில் தனது வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நம்பியார். அதன்படி மூவேந்தர், ரோஜாவனம், விண்ணுக்கும் மண்ணுக்கும், வெற்றி, சுதேசி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களில் தோன்றியிருந்தார். இவர் இறுதியாக 2006 ஆம் ஆண்டு சுதேசி என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த் நாயகனாக தோன்றியிருந்தார்.

M N nambiar

இறுதிக்காலத்தை ஆன்மீகத்தோடு கழித்த நம்பியார் பாக்டீரியா தொற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு இயற்கை  எய்தினார். இவருக்கு ருக்மணி அம்மா என்கிற மனைவியும் இரண்டு மகன்கள் ஒரு மகளும் இருந்தனர். இவரின் மூத்த மகன் சுகுமார் நம்பியார் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டாவது மகன் மோகன் நம்பியார் பிரபல தொழிலதிபர். மேலும் சினேகா நம்பியார் என்கிற மகளும் உள்ளார். இவரது மூத்த மகன் கடந்த 2012 ஆம் ஆண்டுகாலமானார். அதேபோல அவரது மனைவி ருக்மணி அம்மாவும் 2012 ஆம் ஆண்டுமறைந்தார். இந்நிலையில் நம்பியாரின்  குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகளுடன் அமர்ந்திருக்கிறார் எம்.என் நம்பியார்.

click me!