Preethi Kumar And Kishore
சின்னத்திரை நடிகை ப்ரீத்தி குமார் தன்னை விட 4 வயது இளையவரான 'பசங்க' பட குழந்தை நட்சத்திரம் கிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
Preethi Kumar Marriage
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கிஷோருக்கு தேசிய விருது கிடைத்தது. இதோ தொடர்ந்து, விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படத்தில் இளைஞராக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, லீடு ரோலில் இவர் நடித்த, வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் தோல்வியை தழுவியது.
Preethi 4 Years Elder to Kishore
ப்ரீத்தி குமார், கிஷோரை விட 4 வயது இளையவர் என்பதால் இவர்களில் காதல் சமாச்சாரம் பொருளாக மாறியது. திருமணத்திற்கு பின்னர் ப்ரீத்தி குமார் இருவரின் வயசு வித்தியாசம் குறித்து எழுபட்ட கேள்விக்கு, ஒரு போதும் நாங்களோ அல்லது எங்கள் குடும்பத்தினரோ இதை ஒரு பொருட்டாக பார்த்ததில்லை. வயதை முன்னிறுத்தி பேசுவதால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பது போல் பேசி இருந்தார்.
Preethi Announced Pregnancy
திருமணத்திற்கு பின்னர் தற்போது ப்ரீத்தி குமார், சன் டிவியில் 'புனிதா' என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீத்தி குமார் - கிஷோர் ஜோடி விரைவில் பெற்றோர் ஆக போகும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
1200 வருட பழமையான நெல்லையப்பர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!