சீரியல் என்றாலே அது சன் டிவி தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களை சன் டிவி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இன்றளவும் டிஆர்பியில் நம்பர் 1 ஆக திகழ்ந்து வருகிறது சன் டிவி. வார வாரம் வெளிவரும் டாப் 10 சீரியல்களின் பட்டியலில் டாப் 5 இடங்களை சன் டிவி தான் ஆக்கிரமித்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் சீரியல்களை கொடுத்து வரும் சன் டிவி, அந்த சீரியல் பிரபலங்களை கெளரவிக்க, சன் குடும்பம் விருதுகள் என்கிற பெயரில் நடத்தி வருகிறது.
24
sun kudumbam virudhugal 2025 Winners
அந்த வகையில் சிறந்த சீரியல், பேவரைட் ஜோடி, சிறந்த வில்லி, சிறந்த மருமகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி மூன்று முடிச்சு சீரியல், கயல் சீரியல், மருமகள், புது வசந்தம் ஆகிய சீரியல்கள் தான் அதிகப்படியான விருதுகளை வென்றிருக்கின்றன.
அந்த வரிசையில் சிறந்த நாயகிக்கான விருதை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி மற்றும் மூன்று முடிச்சு சீரியல் நாயகி ஸ்வாதி கொண்டே ஆகியோர் வென்றிருக்கிறார்கள். அதேபோல் சிறந்த நாயகனுக்கான விருதை மூன்று முடிச்சு சீரியலின் ஹீரோ நியாஸ் வென்றுள்ளார். சிறந்த மெகா தொடருக்கான விருதை, டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வரும் கயல் சீரியல் வென்றிருக்கிறது. அதேபோல் சிறந்த ஜோடியாக கயல் தொடரில் நடித்த சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி வென்றுள்ளனர்.
44
Sun TV Serial Awards
பெஸ்ட் மருமகளுக்கான விருதை மருமகள் தொடரின் நாயகி கேப்ரியல்லாவும், புது வசந்தம் தொடரில் நடிக்கும் சோனியாவும் வென்றுள்ளனர். அதேபோல் சிறந்த வில்லிக்கான விருதை கயல் தொடரில் நடிக்கும் உமா ரியாஸ் கானும், லட்சுமி தொடரில் நடித்து வரும் ரிந்தியாவும் தட்டிச் சென்றுள்ளனர். சிறந்த இளம் வில்லிகளுக்கான விருதை இலக்கியா தொடரில் நடிக்கும் சுஷ்மாவும், மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் கிருத்திகாவும் வென்றுள்ளனர். சிறந்த அம்மாவுக்கான விருதை கயல் தொடரில் நடிக்கும் மீனா குமாரியும், செவ்வந்தி சீரியலில் நடித்த திவ்யா ஸ்ரீதரும் வென்றனர்.