விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விதமாகவும், அவர்களது நடன திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.
இந்த நிகழ்ச்சியின் ஃபைனலில், டைட்டில் பட்டத்தை... அமீர் - பாவனி ஜோடி தட்டி சென்றது. விருதை கையில் வாங்கியதும், அமீரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் பாவனி.
பேய்-கடவுள் சுற்றில் நடனமாடிய சுஜா கீழே விழுந்ததும், தன்னை அறியாமலேயே சிறுநீர் போய் விட்டதாகவும், பின்னர் பரிசோதனை செய்து பார்த்த போது தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இரண்டாவது முறையாக மிகவும், சந்தோஷமாக இருந்த இந்த ஜோடி, மருத்துவரின் ஆலோசனைப்படி மீண்டும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.