இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 6 மணிக்கே டிரைலர் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். பின்னர் 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் 9 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக சாடி வருகின்றனர். சொன்ன நேரத்தில் சரியாக டிரைலரை வெளியிட மாட்டீர்களா, எவ்வளவு நேரம் காத்திருப்பது என லைகா நிறுவனத்தை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ, டிரைலர் எங்கடா, சோதிக்காதீங்க என்றெல்லாம் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... முதலில் கதையை புரிஞ்சிகிட்டு வாங்க..! வாயை விட்டு சிக்கிய பத்திரிகையாளரை கலாய்த்து விட்ட கார்த்தி!